தினமலர் 17.03.2010
தாந்தோணி நகராட்சியில் குடிநீர் திட்டம் குறித்து காரசாரம் நிதி இருப்பு உள்ளதாக தலைவர் விளக்கம்
கரூர்: தாந்தோணி நகராட்சியில் கூடுதல் குடிநீர் திட்டம் அமல்படுத்துவது குறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக, மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தலைவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தாந்தோணி நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் ரேவதி தலைமையில் மன்றக்கூடத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டம் துவங்கியதும், மூன்றாவது வார்டு கவுன்சிலரும், முன்னாள் நகராட்சி தலைவருமான ரவி, “நகராட்சியின் குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல், மெத்தனமாக தலைவர் செயல்படுவதாக தி.மு.க., கவுன்சிலர்களுடன் வெளிநடப்பு செய்தார். கவுன்சிலர் ரவி கூறியதாவது: தாந்தோணி நகராட்சியில் புதிய காவிரி குடிநீர் திட்டம் நகராட்சியின் பங்கு 10 சதவீதம், மாநில அரசின் பங்கு 30 சதவீதம் மற்றும் உலக வங்கி கடன் சேர்த்து பணி முடிக்க அறிவிக்கப்பட்டது. நகராட்சியின் பங்கு தொகை 10 சதவீதம் ஒதுக்கிவைக்க நாங்கள் கூறியபோது தலைவர் ஏற்க மறுத்தார். காவிரி குடிநீர் திட்டத்தில் இனாம் கரூர் நகராட்சியில் 19 கோடி ரூபாய், தாந்தோணி நகராட்சியில் 17.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது தாந்தோணி நகராட்சியின் கைவசம் பொதுநிதியாக 1.91 கோடி ரூபாய் உள்ளது. இந்நிலையில், குடிநீர் திட்டத்துக்கு நகராட்சியின் பங்கு தொகை 1.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய கோரினோம். ஆனால், திட்டம் 32 கோடி ரூபாய்க்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைவர் புதிய காரணம் கூறுகிறார். பொதுநிதியில் இருந்து மற்ற பணிகளுக்கு செலவு செய்யப்பட்டால், குடிநீர் திட்ட பங்கு தொகை செலுத்த முடியாது. நிரந்தர திட்டத்துக்கு முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். நகராட்சிதலைவர் ரேவதி கூறியதாவது: கடந்த 2006 நவ., ஆறாம் தேதி கரூர் மற்றும் தாந்தோணிமலை நகராட்சிக்கு கூடுதல் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் ஒப்புதல் க மிட்டியின் கவனத்தில் தற்போது ள்ளது. திட்டம் மறுசீரமைக்கப்பட்டு 33 கோடி ரூபாய் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டம் முடிவு செய்யப்பட்டு நகராட்சி பங்கு தொகை செலுத்த துறை அறிவிப்பு வந்ததும் பணம் செ லுத்தப்படும். இதற்கான நிதி ஆ தாரம் நகராட்சியிடம் உள்ளது.
தாந்தோணி நகராட்சியில் மார்ச் இறுதிக்குள் மட்டும் 50 லட்சம் வரை முத்திரைத்தாள் தீர்வை வரவு வரவாய்ப்புள்ளது. மேலும், 1.84 கோடி ரூபாய் பொதுநிதியில் இருப்பு உள்ளது. பிரச்னை எழுப்பும் கவுன்சிலர்கள் எழுதி தந்த கோரிக்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணியை தற்போது முடிப்பதால், நிதி பிரச்னை ஏதும் ஏற்படாது. கோடையை கருதி மாற்று குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு கூறினார்.