தினமணி 05.04.2013
தாம்பரம் நகராட்சி குளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்
தினமணி 05.04.2013
தாம்பரம் நகராட்சி குளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்
தாம்பரத்தில் நகராட்சிக்குச் சொந்தமான 8 குளங்களை
தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தாம்பரம்
நகர்மன்ற தலைவர் கரிகாலன் கூறினார்.
கிழக்குத் தாம்பரம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஆதிநகர் குளத்தை
தாம்பரம் நகர்மன்ற தலைவர் கரிகாலன் நகர்மன்ற ஆணையர் சிவசுப்ரமணியன்,
பொறியாளர் சீனிவாசன் ஆகியோருடன் புதன்கிழமை சென்று பார்வையிட்டு ஆய்வு
செய்தார்.
தெப்பத் திருவிழா காலத்தில் பொதுமக்கள் குளத்தில் இறங்குவதற்கு வசதியாக
குளக்கரையில் தூர்ந்து போய் இருக்கும் படித்துறைகளைச் சீரமைத்துத்
தரும்படி பெருமாள் கோவில் அறங்காவலர் வி.பாலன், வி.வெங்கடேஷ் ஆகியோர்
கோரிககை விடுத்தனர்.
ஆதிநகர் குளத்தை ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி, கரைமீது பொதுமக்கள்
நடைபயில நடைபாதை அமைக்கவும, திருவிழா காலத்தில் பொதுமக்கள் தெப்பத்
திருவிழா கொண்டாட நான்கு புறத்திலும் படித்துறை அமைக்கவும் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
தற்போது இரும்புலியூர், அற்புதம் நகர், கடப்பேரி, சேலையூர் உள்ளிட்ட
பகுதிகளில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான 8 குளங்களைச் சீரமைக்கும் பணிகள்
தொடங்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் உணவகங்கள் முதல்வரின்
ஆசியுடன் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் கரிகாலன்.