தினமணி 31.07.2013
தாராபுரம் நகராட்சியைத் தரம் உயர்த்த அரசுக்குப்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார்
தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும் என்றால் அதன் பரப்பளவு மற்றும் வருவாயை அதிகரிக்க வேண்டும்.
எனவே நகரை சுற்றியுள்ள கொண்டரசம்பாளையம், பெஸ்ட் நகர், ராம்நகர்,
தெக்காலூர், நஞ்சியம்பாளையம், கணபதிபாளையம் ஆகிய ஊர்களை தாராபுரம் நகராட்சி
பகுதியுடன் இணைத்தால் வருவாய் பெருகும்.
அதேபோல் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தால் தேர்வுநிலை நகராட்சியாக மாற்ற முடியும்.
எனவே சுற்றுப்புறப் பகுதிகளை நகராட்சியுடன் இணைத்து வருவாயை
பெருக்கவும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவும் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நகராட்சியை தரம் உயர்த்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி தரம் உயர்த்தப்படும் பட்சத்தில் மத்திய, மாநில
அரசுகளிடமிருந்து நிதி தாராளமாக கிடைக்கும். இதன் மூலம் மக்களின் அடிப்படை
வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன் நகருக்கு மெட்ரோ சிட்டி அந்தஸ்தையும்
பெறமுடியும்.
இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.