தினகரன் 28.06.2010
தாவணகெரே நகராட்சிக்கு மாநில அரசு விருது
தாவணகெரே, ஜூன் 28: மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வரும் நகராட்சிகளுக்கு சிறந்த நகராட்சி விருது வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வரும் நகராட்சிகளுக்கு சிறந்த நகராட்சி விருது வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து நகரிய மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் கூறியதாவது: நகராட்சி எல்லைகளில் சுத்தம், சுகாதாரம், வரிவசூல், பொதுமக்களின் குறைகளை களைவது உள்ளிட்ட ஏழு கூறுகளில் சிறப்பாக பணியாற்றிவரும் நகராட்சிகளுக்கு சிறந்த நகராட்சி விருதுவழங்கப்படுகிறது. நகராட்சிகளிடமிருந்து பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் விருதுக்குரிய நகராட்சி தேர்வு செய்யப்படும். சிறந்த நகராட்சி விருது ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என்றார்.