தினகரன் 04.08.2010
திட்டக்குடியில் பேரூராட்சி கூட்டம்
திட்டக்குடி, ஆக. 4: திட்டக்குடி பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் உலக செம்மொழி மாநாடு நடத்தி தமிழனின் பெருமையை உலகறிய செய்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
திட்டக்குடி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் மன்னன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கமலி பரமகுரு, நிர்வாக அதிகாரி பழனிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி தமிழனின் பெருமையை உலகறிய செய்த தமிழக முதல்வருக்கும், உறுதுணையாக செயல்பட்ட துணை முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. திட்டக்குடி தருமக்குடிக்காடு, வதிஷ்டபுரம், கோழியுர் பகுதிகளில் குறைந்த அழுத்த மின்சப்ளை உள்ளதால் மின்வாரியம் மூலம் புதிய மின்மாற்றிகள் அமைத்து நடவடிக்கை எடுப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.