திண்டிவனம் நகராட்சியில்வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்
திண்டிவனம்:திண்டிவனம் நகராட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.திண்டிவனம் நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் எஸ்.@ஜ.எஸ்.ஆர்.ஒய்., திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் திறன் வளர்ப்பு முகாம் நடந்து வருகிறது.இந்த ஆண்டிற்கான பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ள இளைஞர்களுக்கு, விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி 20ம் தேதி துவங்கியது.இரண்டு நாட்கள் நடந்த பயிற்சி முகாமை ஆணையர் அண்ணாதுரை துவக்கி வைத்தார். மேலாளர் கிருஷ்ணராஜ், கவுன்சிலர் முரளிதாஸ், சமூக அமைப்பாளர்கள் ராஜலட்சுமி, ஜெயஸ்ரீபிரபா மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.முகாமில் தேர்வு செய்யப்பட்ட, இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தினமலர் 26.03.2013