தினமலர் 12.02.2010
திண்டுக்கல் குடிநீர் பிரச்னைக்கு மாற்று ஏற்பாடு
திண்டுக்கல்:””திண்டுக்கல்லில் தினமும் குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதற்கு ஆய்வு நடந்து வருவதாக” நகராட்சி தலைவர் ஆர்.நடராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:திண்டுக்கல்லில் பாதாள சாக்கடை பணிகளுக்காக ரோடுகள் தோண் டப்பட்டு குழாய்கள் பதிக்கப்படுகின்றன.
தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைப்பு செய்ய அமைச்சர் பெரியசாமி, துணை முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத் தார்.இதனையடுத்து நகராட்சிகளின் தலைமை பொறியாளர் திண்டுக் கல் லிற்கு வந்த ஆய்வு செய்ததின் பேரில் நகராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
சாலை சீரமைப்பு பணிகளுக்காக ஏற்கனவே அரசு ஒதுக்கிய சிறப்பு நிதியை கொண்டு நகரில் பல முக்கிய ரோடுகள் சீரமைக்கப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ளன. திண்டுக்கல்லில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வைகை அணையில் இருந்து 26 கி.மீ., தூரம் தனி குழாய் அமைத்து பேரணைக்கு நீரை கொண்டு வந்து அங்கிருந்து, திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளுக்கு ஒரே சீராக குடிநீர் வினியோகம் செய்ய சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை நிறைவேற்ற ஆய்வுப்பணி நடந்து வருகிறது.திட்டம் நிறைவேறும் போது திண்டுக்கல்லுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.