தினகரன் 09.12.2010
தினகரன் செய்தி எதிரொலி உயிரியல் பூங்கா சீரமைக்க உத்தரவு
கோவை, டிச. 9: கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவை சீரமைக்க உத்தரவிடப்பட்டது. கோவை மாநகராட்சியின் உயிரியல் பூங்காவை மூட மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டது. இது குறித்து கடந்த 4ம் தேதி தினகரனில் பூங்கா தொடர் பான விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதைதொடர்ந்து கோவை மாநகராட்சியின் கல்வி, பூங் கா, மைதான குழுவினர் உயிரியல் பூங்காவில் நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வில், பூங்கா குழு தலைவர் கல்யாணசுந்தரம், செயற்பொறியாளர் கணேஷ்வரன், உதவி பொறியாளர் சுந்தர்ராஜன், உயிரியல் பூங்கா இயக்குநர் பெருமாள்சாமி, கவுன்சிலர்கள் செந்தில்குமார், மீனா, ஷோபனா ஆகியோர் பங்கேற்றனர்.
பூங்காவில் விலங்கு பற வை கூண்டுகள் பழுதடைந்த நிலையில் இருப்பதை பார்த்தனர். வெளிநாட்டு பறவை கள் அமைக்கப்பட்ட கூண் டின் மேல் பகுதி வலை பழுதடைந்து காணப்பட்டது. இந்த வழியாக காக்கைகள் புகுந்து உணவாக வழங்கப்படும் மீன், நண்டுகளை தூக்கி சென்று சாப்பிட்டன. இதை பார்த்த குழுவினர், வலை அமைக்கவேண்டும் தெரிவித்தனர்.
பூங்கா குழு தலைவர் கல்யாணசுந்தரம் கூறுகையில், ‘’ உயிரியல் பூங்கா மாற்றப்படும் நிலையில் இருக்கிறது. கடமான், புள்ளி மான் அடைக்கப்பட்ட இடம் சே றும், சகதியுமாக காணப்பட் டது. இப்பகுதியில் கிணற்று மண் குவிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பார்வையாளர்கள் வந்து செல்லும் பகுதியில் நடை பாதை அமைக்கவும், பழுதடைந்த குரங்கு, பறவை கூண்டுகளை சீரமைக்கவும் குழுசார்பில் கோரிக்கை விடப்பட்டது,” என்றார். மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், பூங்கா சீரமைப்பிற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.
பூங்கா குழுவினர் தமிழ் நாடு வேளாண் பல்கலைகழக வளாகத்தில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளி கட்டடத்தை பார்வையிட்டனர். முழுவதும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இந்த பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலையிருந்தது. இந்த பள்ளியை 47 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. விரைவில் கட்டட பணியை துவக்க உத்தரவிடப்பட்டது.