தினமலர் 21.08.2013
திருச்சி மாநகராட்சி குறைதீர் கூட்டம்
திருச்சி: திருச்சி மாநகராட்சியில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாதந்தோறும் நடப்பது வழக்கம். இதில், அடிப்படை பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் மனு அளிப்பர். இம்மனுக்கள் மீது, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பர்.
மாநகராட்சியின் இம்மாத குறைதீர் கூட்டம், நேற்று (19 ம் தேதி), மேயர் ஜெயா முன்னிலையில், நடந்தது. இதில், துணை மேயர் மரியம் ஆசிக், மாநகராட்சி கமிஷ்னர் தண்டபாணி, நகர பொறியாளர் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சாலை மேம்பாடு, தெருவிளக்கு பழுதுபார்த்தல், கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளுக்கான, 18 மனுக்கள் பெறப்பட்டன.
“பொதுமக்களின் மனுக்களை, உரிய துறை அலுவலர்களுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மேயர் வலியுறுத்தினார்.