தினகரன் 06.09.2010
திருச்செந்தூர் பேரூராட்சி கூட்டம்
திருச்செந்தூர், செப். 6: திருச்செந்தூர் பேரூராட்சி மன்றக் கூட்டம் நடந்தது. தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார், நிர்வாக அதிகாரி வீரப்பன், துணைத்தலைவர் இசக்கியம்மாள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் செந்தில்ஆறுமுகம், சங்கர், காந்திமதி பேசுகையில், ‘எங்கள் பகுதியில் உள்ள தெரு விளக்குகள் பகலிலும் எரிகின்றன. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிர்வாக அதிகாரி வீரப்பன்: மின் இணைப்பு கோளாறு காரணமாக தான் விளக்குகள் எரிந்தன. தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது.
கவுன்சிலர் ஜெரால்டு: எனது வார்டில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நிர்வாக அதிகாரி: குப்பைகளை அகற்ற ஏற்பாடுகள் செய்யபடும்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் சங்கர், சக்திவேல், காளிதாஸ், அரிகரசுப்பிரமணியன், செந்தில்ஆறுமுகம்,வடிவேல், ஜெரால்டு, வள்ளிஅம்மாள், சண்முகசுந்தரி, எழுத்தர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடந்தது.