தினத்தந்தி 02.11.2013
தீபாவளி பண்டிகையையட்டி அம்மா உணவகங்கள் இன்று செயல்படும்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதல்&அமைச்சரால் தொடங்கி
வைக்கப்பட்ட 200 அம்மா உணவகங்களிலும் மலிவு விலையில் தரமான, சுத்தமான
உணவுகளை வழங்கி பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தீபாவளித் திருநாளான இன்று (சனிக்கிழமை) சென்னை
மாநகராட்சி பகுதிகளில் உள்ள 200 அம்மா உணவகங்களும் செயல்படும் எனவும்,
தீபாவளித் திருநாளையட்டி 200 அம்மா உணவகங்களிலும் இன்று காலை வேளையில்
சிற்றுண்டி சாப்பிட வரும் பொதுமக்களுக்கு சிற்றுண்டியுடன் இனிப்பு
வழங்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.