தினமணி 31.07.2013
தினமணி 31.07.2013
துப்புரவுப்பணி: சான்றிதழ்கள் சரிபார்ப்பு
திண்டிவனம் நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்
பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணி
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டிவனம் நகராட்சியில் உள்ள 41 துப்புரவுப் பணியிடங்களுக்கு மொத்தம் 169 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, நகர்மன்றத் தலைவர்
கே.வி.என்.வெங்கடேசன் மற்றும் ஆணையர் அண்ணாதுரை முன்னிலையில் நடைபெற்றது.
நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்
ரஞ்சித்குமார், நகராட்சி அலுவலர் சந்திரா உள்ளிட்டோர் இப்பணியில்
ஈடுபட்டனர்.