தினமணி 03.05.2010
துப்புரவு பணியாளர்களுக்கு விருது
சேலம், மே 2: சேலம் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு மேயர் ரேகா பிரியதர்ஷிணி ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கினார்.
÷சேலம் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தின விழா நேரு கலையரங்கில் நடைபெற்றது. மேயர் ரேகா பிரியதர்ஷிணி தலைமை தாங்கினார். துணை மேயர் பன்னீர்செல்வம், ஆணையர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் 12 பேருக்கு விருது மற்றும் தலா ரூ.1,000 ரொக்கப் பரிசை மேயர் ரேகா பிரியதர்ஷிணி வழங்கினார். மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் பொற்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.