தின மணி 17.02.2013
துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்த
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்திலுள்ள 450 துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச கண் மற்றும் பொது மருத்துவப் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கீழரண் சாலையிலுள்ள மாநகராட்சி மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை மேயர் அ. ஜெயா தொடங்கி வைத்தார். இந்த முகாமில் இசிஜி, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை போன்ற அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
இதில் அறுவைச் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரசு காப்பீட்டுத் திட்டத்தில் அதை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில், மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி, கோட்டத் தலைவர் ஜெ. சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் பி. கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர் எஸ். அருணாசலம், நகர்நல அலுவலர் ந. ராஜேசுவரி, உதவி ஆணையர் கே. ராஜம்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.