தினமணி 26.09.2009
தூர்வாரும் பணி: மாநகராட்சி தீவிரம்
சென்னை, செப். 25:””மழை காலம் நெருங்குவதைத் தொடர்ந்து, கால்வாய்களை தூர்வாரும் பணியை மாநகராட்சி துரிதப்படுத்தியுள்ளது” என மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் கொடுங்கையூர் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், ஏகாங்கிபுரம் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மேயர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் மேயர் மா. சுப்பிரமணியன் கூறியது:
மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் புதிய மழை நீர் வடிகால்வாய் கட்டும் பணிகளும், கால்வாய்களை தூர்வாரும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.