தினமணி 08.06.2010
தென்காசி நகராட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டுப்பாட்டு அறை
தென்காசி, ஜூன் 7:தென்காசி நகராட்சியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க நகராட்சி அலுவலகத்தில் கணக்கெடுப்புக் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்காசி நகர்மன்ற ஆணையர் சா. செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி நகராட்சியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கடந்த 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வீட்டுப் பட்டியல், தேசிய மக்கள்தொகைப் பதிவேடுகள் தயாரிக்கும் பணிகளுக்காக பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க நகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொறுப்பு அலுவலராக இரா. நாரயணசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் நகராட்சியில் 222228 என்ற தொலைபேசி எண்ணிலோ, நேரடியாகவோ கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்