தெரு நாய்களுக்கு கருத்தடை: கமுதி பேரூராட்சி ஏற்பாடு
கமுதியில் பெண் நாய்களுக்கு பேரூராட்சி ஏற்பாட்டின்பேரில், கருத்தடை அறுவை சிகிச்சை, புதன் கிழமை நடைபெற்றது.
கமுதியில் பெருகி வரும் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு பெரும் தொல் லைகள் ஏற்பட்டுள்ளது. தெரு நாய்கள் கடித்ததால் சிறுவர், சிறுமிகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக கமுதி பேரூராட்சியில் புகார் செய்ய ப்பட்டது.
இதையடுத்து கமுதியில் நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பேரூராட்சித் தலைவர் எஸ்.கே.சி. ரமேஷ் பாபு, செயல் அலுவலர் ஏ. தனபாலன் ஆகியோர் ஆலோசனையின்பேரில் நாய் பிடிக்கும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள், கமுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.
கமுதி-கோட்டைமேட்டில் உள்ள அரசு கால்நடைகள் மருத்துவமனையில் பெண் நாய்களுக்கு மருத்துவர் ரவிச்சந்திரன் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், கருத்தடை அறுவை சிகிச்சை அளித்தனர்.