தெற்கு தில்லி மாநகராட்சி வார்டு கமிட்டி தேர்வு
தெற்கு தில்லி மாநகராட்சி வார்டு கமிட்டிகளுக்கான தலைவர், துணை தலைவர் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில், தெற்கு மண்டல வார்டு கமிட்டிக்கு பாஜகவின் கர்தார் சிங் (தலைவர்), ராஷ்ட்ரீய லோக் தளக் கட்சியின் அனிதா தியாகி (துணை தலைவர்), பாஜகவின் சத்யேந்தர் பிரகாஷ் (உறுப்பினர்) ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேற்கு மண்டல வார்டு கமிட்டிக்கு பாஜகவின் ஷ்யாம் சர்மா (தலைவர்), சுயேச்சை உறுப்பினர் நரேஷ் பலியான் (துணை தலைவர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நஜஃப்கர் மண்டல வார்டு கமிட்டிக்கு பாஜகவின் குல்தீப் சோலங்கி (தலைவர்), சுயேச்சை உறுப்பினர் பூனம் பரத்வாஜ் (துணை தலைவர்) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவருக்கு போட்டியிட்ட இந்திய தேசிய லோக் தள கட்சியின் வேட்பாளர் நீலம், துணை தலைவருக்கு போட்டியிட்ட சுயேச்சை உறுப்பினர் பிரதீப் குமார் ஆகியோர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றனர்.
குலுக்கல் முறையில் தேர்வு:
தெற்கு தில்லி மாநகராட்சியின் மத்திய மண்டல வார்டு கமிட்டி தலைவருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சந்திர பிரகாஷும், காங்கிரஸ் கட்சியின் வீரேந்திர கஸôனாவும் போட்டியிட்டனர். இருவருக்கும் தலா 15 வாக்குகள் கிடைத்தால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.
அதில், வீரேந்தர் கஸôனா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். மத்திய மண்டல வார்டு கமிட்டி துணை தலைவராக தேசியவாத காங்கிரஸின் ஃபூல் கலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.