தெற்கு தில்லி மாநகராட்சி சிறப்பு குழுக்கள் இன்று தேர்வு
தெற்கு தில்லி மாநகராட்சியின் சிறப்பு குழுக்களுக்கான தலைவர்கள், துணைத் தலைவர்கள் வியாழக்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து, மாநகராட்சி செய்தி தொடர்பாளர் முகேஷ் யாதவ் புதன்கிழமை கூறியதாவது: சிவிக் சென்டரில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற உள்ள மாநகராட்சி கூட்டத்தில் சிறப்பு குழுக்களுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஒழுங்கு நடவடிக்கைக் குழு, பணிக்குழு, பொது சுகாதாரக் குழு, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு, சட்டக் குழு, உயர்நிலை சொத்து வரி குழு, ஹிந்தி வளர்ச்சிக் குழு, விளையாட்டு மேம்பாட்டுக் குழு; மாநகராட்சி கணக்குகள் நிர்வாகக் குழு உள்ளிட்ட சிறப்பு குழுக்களுக்கு தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
உரிமம் அளிக்கும் குழு; சமூக நலத்துறை சேவைக் குழு, தாழ்த்தப்பட்டோர் நலக்குழு, மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுக் குழு, மலேரியா தடுப்புக் குழு, புகார் நடவடிக்கை குழு, வெள்ளத் தடுப்புக் குழு, தேசிய விழா மற்றும் கண்காட்சி அமைப்புக் குழு ஆகிய இடைக்காலக் குழுக்களுக்கான தலைவர், துணைத்தலைவர்கள் வெள்ளிக்கிழமை (மே 31) நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவர் என்று முகேஷ் யாதவ் கூறினார்.