தினமணி 26.08.2013
தினமணி 26.08.2013
தேனி புதிய பஸ் நிலையம்
தேனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில்
அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை நிதி அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனியில், தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை சிட்கோ வளாகம்
பின்புறம் உள்ள இடத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையப்
பணி கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.
புதிய பஸ் நிலையத்துக்கான அணுகு சாலையை சீரமைக்க வனத் துறையிடம்
அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால், பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்குத்
திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நகராட்சி புதிய பஸ் நிலையத்தை நிதி அமைச்சர் ஓ.
பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிய பஸ் நிலைய
திறப்புக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
நடத்தினார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி, தேனி நகர் மன்றத் தலைவர்
எஸ்.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.