தின மணி 21.02.2013
செய்யாறை அடுத்துள்ள பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு தொற்று நோய்களை தடுப்பது குறித்து பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் ரத்தினவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தொற்று நோய்கள், நீரினால் பரவும் நோய்கள், கொசுக்களால் பரவும் நோய்கள் உள்ளிட்டவை குறித்தும் அவற்றை தடுப்பது குறித்தும் செயல்விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார்.
பெருங்கட்டூர், தென்கழனி, அசனமாப்பேட்டை, வடமணப்பாக்கம், தென்னம்பட்டு, பெருமாந்தாங்கல்,கொடையம்பாக்கம், அழிவிடைதாங்கி ஆகிய ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வி.ஜி.ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் கே.சம்பத், பெருமாள், தனசேகர் ஆகியோர் பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.