தினமலர் 22.04.2010
தொழிற்கல்வி பயிற்சிக்கு நகராட்சியில் நேர்காணல்
திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு தொழிற் கல்விக் கான நேர்காணல் நடந்தது.பொன்விழா நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத் தின் மூலம் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக 6 மாத இலவச கணினி பழுது பார்த்தல் மற்றும் மொபைல் போன் பழுது பார்த்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திண்டிவனத்தில் மூன்று நிறுவனங்களின் மூலம் 58 பயனாளிகளுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள் ளது. அரசு உதவித்தொகையுடன் கூடிய இந்த 6 மாத இலவச பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற சேர்மன் பூபாலன் தலைமையில் நேற்று நேர்முகத்தேர்வு நடந்தது.இதில் சி.எஸ்.சி., கம்ப் யூட்டர் நிறுவன திண்டிவனம் கிளை மேலாளர் பிரபாகர், டி.சி.பி.எஸ்., நிறுவன இன்ஸ்ரக்டர் பாலாஜி, டி.சி.எஸ்.டி., நிறுவன பொறுப்பாளர் அப்துல் அமீது ஆகியோர் தகுதியான வர்களை தேர்வு செய்தனர்.