தினகரன் 01.06.2010
நகரமன்றத்தில் தீர்மானம் பாதாள சாக்கடை பணியை விரைவில் முடிக்க வேண்டும்
திருவள்ளூர், ஜூன் 1: பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவில் முடிப்பது என திருவள்ளூர் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
திருவள்ளூர் நகரமன்ற கூட்டம் மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. நகரமன்ற தலைவர் பொன்.பாண்டியன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் முத்து ராமேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பது, பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவில் முடிப்பது, பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்த இடங்களில் சிமென்ட் சாலை அமைப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.