தினமணி 15.06.2013
தினமணி 15.06.2013
நகராட்சிகளை தூய்மையாக்கும் திட்டம்:திருவள்ளூரில் இன்று தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக
மாற்றும் நோக்கில் முதல் கட்டமாக நகராட்சிகளை தூய்மையாக்கும் திட்டத்தை
திருவள்ளூர் நகராட்சியில் சனிக்கிழமை அமைச்சர் பி.வி.ரமணா தொடங்கி
வைக்கிறார்.
இதுகுறித்து திருவள்ளூர் நகராட்சி சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்ற மாவட்ட
ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அனைத்து நகராட்சிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இம்மாவட்டத்தில் முதல் கட்டமாக திருவள்ளூர், திருத்தணி, ஆவடி,
திருவேற்காடு, பூந்தமல்லி ஆகிய நகராட்சிகளில் துப்புரவுப் பணி
மேற்கொள்ளப்பட உள்ளது. திருவள்ளூர் நகராட்சியில் நேதாஜி சாலையில் உள்ள
ராஜம்மாள் தேவி பூங்காவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.வி.ரமணா இத்திட்டத்தை தொடங்கிவைக்கின்றார்.
இதில் 5 லாரிகள், 50 துப்புரவுப் பணியாளர்களுடன் 5 லாரிகள் மூலம்
குப்பை அகற்றுதல், கால்வாய் மண் அகற்றுதல், செடி கொடிகளை அப்புறப்படுதுதல்,
சந்துகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு
அதில் கூறப்பட்டுள்ளது.