தினமணி 27.07.2013
தினமணி 27.07.2013
நகராட்சிப் பள்ளி கட்டடம் திறப்பு
சிதம்பரம் மாலைக்கட்டித் தெரு நகராட்சி நடுநிலைப்
பள்ளியில் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்புறைக்
கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார்.
நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
நகர்மன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் திறந்து வைத்தார். விழாவில் நகர்மன்ற
உறுப்பினர் க.சீதாராமன், தலைமை ஆசிரியை பா.வாசுகி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
நியாயவிலைக் கடை திறப்பு: சிதம்பரம் நகராட்சி 6-வது வார்டில் வாகிசநகர்
2-ஆவது பிரதான சாலையில் புதிய ரேஷன் கடை கட்டடத்தை நகர்மன்றத் தலைவர்
எஸ்.நிர்மலாசுந்தர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஆணையர்
(பொறுப்பு) ஆர்.செல்வராஜ், நகரமன்ற உறுப்பினர் சுமதிமோகன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.