தினமணி 14.06.2013
தினமணி 14.06.2013
நகராட்சியில் சுகாதாரப் பணிகள்ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் நகராட்சியில் சுகாதாரப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஆணையர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
அனைத்து வார்டுகளிலும் வாரத்தில் இரண்டு நாள்கள் துப்புரவுப் பணிகள்
மேற்கொள்வது, நகராட்சி பகுதிகள் விரிவடைவதால் நகரின் முக்கியப் பகுதிகளை
தனியார் மயமாக்குவது உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் சுகவனம், சீனுவாசன், வருவாய் ஆய்வாளர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.