தினமலர் 13.04.2010
நகராட்சி அலுவலகம் கட்டுமான பணி ஜரூர்
திருப்பூர் : ரூ.50 லட்சம் மதிப்பில் நல்லூர் நகராட்சி அலுவலகம் கட்டுமான பணி நடந்து வருகிறது. வரும் 2011ல் திருப்பூர் மாநகராட்சியோடு இணையும் நல்லூர் நகராட்சியில், புதிய அலுவலகம் கட்டும் பணி வேகமாக நடக்கிறது. மாநகராட்சியோடு இணைந்த பின், கிழக்கு மண்டல அலுவலகமாக செயல்பட உள்ளது; அதற்கேற்ப, கட்டட வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், தரைத்தளத்துக்கு ‘டைல்ஸ்‘ பதிக்கும் பணி நடந்தது. இறுதிக்கட்ட பணியாக, முகப்பு பணிகள் துரிதமாக நடக்கின்றன. சுவர்களுக்கு வெள்ளை அடித்தல், ஜன்னல் அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. பெயிண்ட் அடித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் 15 நாட்களில் முடிந்துவிடும். திறப்பு விழா நடத்த, மே மாதம் புதிய அலுவலகம் தயார் நிலையில் இருக்கும் வகையில், கட்டுமான பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.