தினமணி 12.02.2014
நகராட்சி ஆணையருக்கு பிரிவு உபசார விழா
பணி மாறுதலாகிச் செல்லும் திருவண்ணாமலை நகராட்சி ஆணையருக்கு, நகராட்சி ஊழியர்கள் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை
நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்தவர் பெ.விஜயலட்சுமி. இவர், காரைக்குடி
நகராட்சி ஆணையராக அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து,
நகராட்சி ஊழியர்கள் சார்பில் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
விழாவுக்கு,
அலுவலக மேலாளர் பழனி தலைமை வகித்தார். நகரமைப்பு அலுவலர் ஜெயவேல், சுகாதார
ஆய்வாளர் ஆல்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, நகராட்சி
அலுவலக ஊழியர்கள் மாறுதலாகிச் செல்லும் ஆணையரைப் பாராட்டிப் பேசினர்.
ஆணையர் பெ.விஜயலட்சுமி ஏற்புரை வழங்கினார். ஆணையருக்கு அலுவலக ஊழியர்
சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில், நகராட்சிப் பொறியாளர்
ஜோதிமணி, சுகாதார ஆய்வாளர் வினோத் கண்ணா, நகர் நல அலுவலர் அஜந்தா, சமூக
ஒருங்கிணைப்பாளர்கள் இந்திரா, செல்வராணி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.