நகராட்சி இடங்களை ஆக்கிரமிக்க கூடாது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்கமிஷனர் எச்சரிக்கை
பழநி:பழநி நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடரும் ஆக்கிரமிப்பு பகுதிகளை, அவர்களாகவே அகற்றவேண்டும். இல்லையெனில் போலீஸ் மூலம் கிரிமினல் வழக்கு தொடரப்படும். என கமிஷனர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை செய்துள்ளார். பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையினர், தேவஸ்தானம், நகராட்சி நிர்வாகம் இணைந்து, கிரிவீதி, சன்னதிவீதி, அடிவாரம் ரோடு, பழநி-திண்டுக்கல் ரோடு, பஸ் ஸ்டாண்டு பகுதி ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றினர்.
ஆனால் அகற்றப்பட்ட சில நாட்களில் மீண்டும் ஆக்கிரமித்து கடைகள், கொட்டகை, உருவாகியுள்ளன. தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நகராட்சி கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,” நகரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற ஏப்ரல் 5ல் அனைத்து அதிகாரிளும் சேர்ந்து கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. மீண்டும், மீண்டும் எச்சரிக்கை செய்தும், ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நபர்கள் மீது, போலீஸ் மூலம் கிரிமினல் வழக்கு தொடரப்படும். இதுகுறித்து ஆர்.டி.ஓ., தலைமையில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம்,” என்றார்.