தினமலர் 19.03.2010
நகராட்சி எச்சரிக்கை
ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி கமிஷனர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போர், சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை இனங்களுக்கான கடை வாடகை உள்ளிட்டவற்றிற்கான நடப்பாண்டு வரையிலான நிலுவைத் தொகையை வரும் 25ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவித முன் அறிவிப்புமின்றி குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மேற் கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.