தினமலர் 31.03.2010
நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்க ஆண்டு விழா
குடியாத்தம் : குடியாத்தம் நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்க ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தரணம்பேட்டையில் நடந்தது.தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ராமலிங்கம், இணை செயலாளர் சீனிவாசமூர்த்தி, துணை செயலாளர் முனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சம்பந்தம் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் வக்கீல் சம்பத்குமார், குடியாத்தம் வணிகர் சங்க பேரவை செயலாளர் முல்லை சுந்தரேசன் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் நிர்வாகிகள் சசி, ஜாவித் அகமத், கங்காதரன், தனஞ் செயன், வெங்கடகிருஷ்ணன், அன்வர் அலிகான், பாலாஜி, ராஜேந்திரன், பலராமன், வேலூர் மாவட்ட ஜவுளி ரெடிமேட் வியாபாரிகள் சங்க தலைவர் ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தீர்மானங்கள்: தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு மீண்டும் 3மணி நேரம் மின்வெட்டை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். எனவே அரசு நிலையான மின்வெட்டை அறிவித்து பொதுமக்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். மத்திய அரசு, வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் செயல்படுவதற்கு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்யவேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.’