தின மலர் 26.02.2013
நகராட்சி பள்ளியில்அறிவியல் கண்காட்சி
தர்மபுரி: தர்மபுரி எஸ்.வி., ரோடு நகராட்சி நடுநிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.கண்காட்சியை உதவி தொடக்க கல்வி அலுவலர் ரகுநாத் துவங்கி வைத்தார். இதில், மாணவ, மாணவிகள் சோலார் மின்சாரம், சோலார் பஸ், மின்சார மணி, உணவு வலை, மழைநீர் சேகரிப்பு மாதிரி, மூலிகைகளின் பயன், இதய அமைப்பு, மனித எழும்பு கூடு, குவி, குழி லென்ஸ்களின் பலன்கள் மற்றும் இயக்கம் குறித்து சக மாணவர்கள் மற்றும் பிற பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.கண்காட்சியில் சிறப்பான முறையில் கண்காட்சி அமைத்து விளக்கம் அளித்த மாணவி, நந்தினி, பூங்கொடி, ஆகியோருக்கு, பள்ளி தலைமையாசிரியர்(பொ) தாமோதரன் பரிசு வழங்கி பாராட்டினார்.
ஆசிரியர் கயற்கன்னி, செல்வம், தையல் ஆசிரியை பிரேமா உடன் இருந்தனர்.