நகர்மன்றக் கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி
பண்ருட்டி நகராட்சியில் நடந்த நகர்மன்ற சாதாரணக் கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு நன்றித் தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெள்ளிக்கிழமை நடந்த நகர்மன்றக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
இதில் என்.எல்.சி.,நிறுவன பங்குகளை எந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கும் விற்பனை செய்யக் கூடாது, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம், தமிழ் மாநில தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் போன்ற தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த தமிழக முதல்வருக்கு நன்றித் தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில், நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, பொறியாளர் ராதா, துணைத் தலைவர் மல்லிகா மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.