தினமணி 03.09.2010
நகர்மன்றத் தலைவர் ஆய்வு
விழுப்புரம், செப்.2: விழுப்புரம் திரு.வி.க. வீதியில் நகராட்சி ஊழியர்கள் 100 பேர் ஒரேநாளில் மேற்கொண்ட முழு சுகாதாரப் பணியை நகர்மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தால் ஆங்காங்கே தேங்கியுள்ள மண்
, பள்ளங்கள் ஆகியவை பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. எனவே நகராட்சி ஊழியர்கள் அனைவரும் அந்த வீதியில் திரண்டு முழு சுகாதாரப் பணியில் ஈடுபட்டனர். தேங்கியிருந்த மண்ணை பெருக்கியெடுத்து டிராக்டரில் எடுத்துச் சென்றனர். பள்ளங்கள் ஜேசிபி எந்திரத்தின் மூலம் சரி செய்யப்பட்டது.