தினமணி 25.11.2010 நகர ஊரமைப்பு இயக்குநரிடம் தொழில் வர்த்தக சங்கம் மனு மதுரை
இச்சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்
.ரத்தினலேல், தமிழ்நாடு நகர ஊரமைப்பு இயக்குநர் பங்கஜ்குமார் பன்சாலிடம் அளித்த மனு விவரம்:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் கட்டப்படும்
50 அடிக்குக் குறைவான உயரமுள்ள கட்டடங்களுக்கு வரைபட அனுமதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெற்றால் போதுமானது என்று உடனடியாக அறிவிக்கவேண்டும்.புதிதாகக் கட்டப்படும் பெரிய கட்டடங்களுக்கு கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான கட்டணத்தை அரசு வசூலித்து வருகிறது
. ஒரு சதுர மீட்டருக்கு 375 என நிர்ணயிக்கப்பட்ட இக் கட்டணம், 2008-ம் ஆண்டு 250 எனவும், 2009-ல் 125 எனவும் குறைக்கப்பட்டது. ஆனால், எந்த இதர வசதிகளையும் அரசு செய்து தருவதில்லை. எனவே, இக்கட்டணத்தை ரத்து செய்யவேண்டும்.வட்டாரத் திட்டப் பகுதி
, உள்ளூர் திட்டப் பகுதி மற்றும் புதிய நகர அபிவிருத்திப் பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாஸ்டர் பிளான் ஒன்று அரசால் ஏற்படுத்தப்பட்டு வணிக, குடியிருப்பு, தொழிற்சாலை போன்ற உபயோகத்துக்கு என்று தனித்தனியாக பகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால், 10 ஆண்டுகள் முடிந்த பின்னரும் இத்தகைய மாஸ்டர் பிளான்கள் மறுபரிசீலனை செய்யப்படவில்லை. எனவே, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவ்வப்போது ஏற்படும் தேவைக்கு ஏற்ப இந்த பிளானை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.