தினமலர் 22.02.2010
நல்லூரில்தூய்மை பணி மும்முரம்
திருப்பூர்:நல்லூர் நகராட்சி மற்றும் கே.செட்டிபாளையம் பகுதிகளில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.மத்திய அமைச்சர் வாசன் நேற்று திருப்பூர் வந்தார். இதையொட்டி, செரங்காடு, விஜயாபுரம் பகுதிகளை துப்புரவு தொழிலாளர்கள் நேற்று தூய்மைப்படுத்தினர். திருப்பூர் மாவட்ட துவக்க நாள் விழா, இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு, கே.செட்டிபாளையம் பகுதி தாராபுரம் ரோடு, ரிங் ரோடு பகுதிகளில் “மாஸ் கிளீனிங்‘ பணியில் துப்புரவு தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.நகராட்சியில் உள்ள 30க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களுடன், மாநகராட்சி பணியாளர்களும் இணைந்து பணியாற்றினர்.