தினமலர் 02.09.2010
நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் பணியிடம் காலி: பணிகள் பாதிப்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளதால் பணிகள் பாதித் துள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனராக பணியாற்றிய முத்துகுமார் கடந்த 8 மாதத்திற்கு முன் மாறுதலாகிச் சென்றார். அவருக்கு பதில் வேறு யாரும் நியமிக்கப்படாமல் பண்ருட்டி ஆணையாளர் உமா மகேஸ்வரி கூடுதலாக பொறுப்பு வகிக்கிறார். பண்ருட்டி நகராட்சிலேயே பணிசுமை அதிகமாக இருப்பதால் நெல் லிக்குப்பம் நகராட்சி பணியை அவரால் கவனிக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் அவரும் கடந்த ஒரு மாதமாக மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். நெல்லிக்குப்பம் நகராட்சி இன்ஜினியர் புவனேஸ்வரி கூடுதலாக கமிஷனர் பொறுப்பையும் வகிக்கிறார். இவர் தற் போது அலுவலக பணியை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. வெளியில் நடைபெறும் பணிகளை பார்வையிட நேரம் இல்லாததால் பணிகள் தரம் குறைய வாய்ப் புள்ளது. நகர மன்றத்தில் உடனடியாக கமிஷனர் நியமிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி இரண்டு மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. சேர்மன் கெய்க் வாட்பாபு உயர் அதிகாரிகளை சந்தித்து கூறியும் பலனில்லை. நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணிகள் முறையாக நடக்க வேண்டுமானால் உடனடியாக கமிஷனரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.