தினமலர் 02.11.2010
பட்டாசு கடைகளுக்கு உரிமம்வழங்குவதில் மாநகராட்சி குழப்பம்
சென்னை : நகரில் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் சென்னை மாநகராட்சி குழப்ப நிலையில் உள்ளது. உரிமம் இல்லாமலே நகரில் பல இடங்களில் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், நகரில் பல இடங்களில் தற்போது, பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் போலீஸ் தடையின்மை சான்றும் இல்லை. மாநகராட்சியின் உரிமமும் இல்லை.இது குறித்து, மாநகராட்சி மண்டல உதவி வருவாய் அலுவலரிடம் விசாரித்த போது, மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். ஒரு உதவி வருவாய் அலுவலர், “”நாங்கள் உரிமம் கொடுக்க வேண்டியதில்லை. போலீஸ் தீயணைப்பு துறையினரிடம் தடையின்மை சான்று பெற்றால் போதும்,” என்கிறார்.மற்றொரு உதவி வருவாய் அலுவலர்,”போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் தடையின்மை சான்று பெற்று வந்து கொடுத்த பின் நாங்கள் உரிமம் கொடுப்போம்‘ என்கிறார். உரிமம் கொடுப்பதா, இல்லையா என்பதே மாநகராட்சி வருவாய் அலுவலர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த அனுமதியும் இல்லாமல், நகரில் நான்கு, ஐந்து நாட்களாக, செயல்படும், பட்டாசு கடைக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பது தெரியவில்லை.மாநகராட்சி கமிஷனர், கார்த்திகேயன் கூறும் போது, “பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் போலீசிடம் அனுமதி பெற வேண்டும். மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட கடைக்காரர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும். இதற்கு மண்டல அளவில் உதவி வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.