தினகரன் 27.05.2010
பண்ருட்டி பகுதிக்கு கெடிலம் ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை
பண்ருட்டி, மே 27: பண்ருட்டி நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகர்மன்ற தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். ஆணையர் உமா மகேஸ்வரி, மேலாளர் விஜயலட்சுமி, சுகாதார அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மங்களூர் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு 5 நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பழனி (திமுக):
நகராட்சியில் வரிவிதிப்பு கமிட்டி இருக்கிறதா? சரியாக செயல்படவில்லை. வருவாய் ஆய்வாளர்கள் அதிக அளவில் வரி விதிக்கிறார்கள்.
பரமசிவம் (திமுக):
நகராட்சி பகுதிகளில் மக்கள் குடிக்கும் குடிநீரில் கழிவுகள் கலந்துள்ளது.
நகராட்சியின் நீர் ஒட்டு மொத்தமாகவே சரியாக இல்லை. குப்பைகள் அள்ளுவதில்லை. கெடிலம் ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தட்சிணாமூர்த்தி (திமுக):
வரிவிதிப்பு கமிட்டியில் வரும் மனுக்களை தீர விசாரித்து முடிவு கட்டப்பட வேண்டும்.
துணைத்தலைவர் கோதண்டபாணி:
3 பிரிவாக வரி பிரிவுகள் பிரித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கூடுதல் தொகை வசூலித்தால் திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நகராட்சி தலைவர் பச்சையப்பன்:
வரி விதிப்பு கூட்டங்கள் நடத்தப்படும். அதில் குறைகளை கூறலாம். கவுன்சிலர்கள் கூறிய குறைகள் முறையாக ஆய்வு செய்யப்படும்.
வரிகள் பண்ருட்டி நகராட்சி யில் குறைவாகத் தான் உள்ளது. மற்ற மாநகராட்சிகளில் பண்ருட்டியை விட அதிகமாக வரி விதிப்பு செய்கின்றனர். கெடிலம் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்க வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் கதிரேசன், அப்துல் ரகுப், கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகர்மன்ற தலைவர் தகவல்