தினமணி 01.03.2013
பவானி நகர்மன்றக் கூட்டம்
காவிரி நதி நீர் உரிமையைப் பெற்றுத் தந்த முதல்வருக்குப் பாராட்டுத் தெரிவித்து பவானி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பவானி நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் கே.சி.கருப்பணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் ராஜேந்திரன், ஆணையர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடச் செய்து தமிழக மற்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளைப் பாதுகாத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் என்.கிருஷ்ணராஜ், ஏ.சி.முத்துசாமி, மோகன், ராஜசேகர் உள்பட பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.