தினமலர் 06.04.2010
பாதாள சாக்கடை தரமில்லை: நகராட்சி கமிஷனரிடம் புகார்
தர்மபுரி: தர்மபுரி ஆறுமுக ஆச்சாரி தெருவில் பாதாளசாக்கடை திட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்று நகராட்சி கமிஷ்னரிடம் மண்டல மனித உரிமை கண்காணிப்பாளர் செந்தில்ராஜா புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது, தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட ஆறுமுக ஆச்சாரி தெருவில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் பாதாள சாக்கடை திட்ட பணி நடந்தது. ஒப்பந்ததாரர்கள் இப்பணியை தரமாக முடிக்காமல் அவசர கோலத்தில் முடித்தனர்.ஆறுமுக ஆச்சாரி தெருவில்போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், சாக்கடை கால்வாயில் இருந்து கிளம்பும் புழுதி, காற்று ஆகிவற்றால் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு நுரையிரல் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் பரவி வருகிறது.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆறுமுக ஆச்சாரி தெருவில் தூசு, புழுதி இல்லாத நிலையை உருவாக்கி, அவசர கோலத்தில் முடிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை தரமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதாள சாக்கடை திட்டத்தை டெண்டர் எடுத்து வேலை செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.