தினமலர் 26.07.2010
பாதாள சாக்கடை திட்ட டிபாஸிட் செலுத்த நகராட்சி கமிஷனர் நேரில் வேண்டுகோள்
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நி றைவேற்றப்பட உள்ள பாதாள சாக்கடை திட்டத்திற்கு டிபாஸிட் செலுத்தக்கோரி நகராட்சி தலைவர், கமிஷனர் மற்றும் அதிகாரிகள் பெரம்பலூர் நகர கடை வீதிகளில் மக்களை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.
பெரம்பலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 23.8 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட பணி துவங்கப்பட்டு தற்போது 85 சதவீத பணி முடிவடைந்து அடுத்த ஆண்டு திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இத்திட்டத்தில் 6 கோடி ரூபாய் மக்கள் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டியுள்ளதால் பாதாள சாக்கடை இணைப்புக்கான வைப்பு தொகையை பொது மக்கள் செலுத்த வேண்டும்.
அதன்படி, வைப்பு தொகையாக 500 சதுர அடிக்கு 3,000 ரூபாயும், வணிக உபயோகத்துக்கு 1,000 ரூபாயும், 501-1,200 சதுர அடிக்கு வீட்டு உபயோகத்துக்கு 4,000 ரூபாயும், வணிக உபயோகத்துக்கு 12 ஆயிரம் ரூபாயும், 1,201-2,400 சதுர அடிக்கு வீட்டு உபயோகத்திற்கு 5,000 ரூபாயும், வணிக உபயோகத்துக்கு 15 ஆயிரம் ரூபாயும், 2,401 சதுர அடிக்கு மேல் வீட்டு உபயோகத்திற்கு 6,000 ரூபாயும், வணிக உபயோகத்துக்கு முப்பதாயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.
மாத வாடகையாக 500 சதுர அடிக்கு 75 ரூபாயும், வணிக உபயோகத்துக்கு 150 ரூபாயும், 501-1,,200 சதுர அடிக்கு வீட்டு உபயோகத்திற்கு 85 ரூபாயும், வணிக உபயோகத்துக்கு 255 ரூபாயும், 1,201-2,400 சதுர அடிக்கு வீட்டு உபயோகத்திற்கு நூறு ரூபாயும், வணிக உபயோகத்துக்கு 300 ரூபாயும், 2,401 சதுர அடிக்கு மேல் வீட்டு உபயோகத்திற்கு 120 ரூபாயும், வ ணிக உபயோகத்துக்கு 600 ரூபாயும், வீட்டு உபயோகத்திற்கு 140 ரூபாயும், வணிக உபயோகத்துக்கு 1,400 ரூபாயும் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். நகராட்சி தலைவர் ராஜா, கமிஷனர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.