தினமலர் 02.08.2010
பாரபட்சமற்ற பணிகள் பேரூராட்சி தலைவர் உறுதி
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளில் எந்த வார்டும் புறக்கணிக்கப்படவில்லை என்று பேரூராட்சி தலைவர் ராமசாமி தெரிவித் துள்ளார். ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் ராமசாமி கவுன்சிலர்களை கலந்து பேசாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுவதாக துணைத்தலைவர் காசிராஜன் உட்பட சில கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைவர் ராமசாமி கூறுகையில், “அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 லட்சம் ரூபாயில் தேவையான வார்டுகளில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. எந்த வார்டும் புறக்கணிக்கப்படவில்லை.
சேடபட்டி–ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் 1,2,3,5,6,11,12,13,14,15,16,17,18 வார்டுகளுக்கும் பிரித்து வினியோகிக்கப்படுகிறது. சிலிண்டர் வினியோகம் சிவில் சப்ளை துறை அதிகாரிகளின் ஆலோசனை பெற்று தேவையான பகுதிகளுக்கு வழங்க கேட்கப்பட் டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட வார்டுகளில் விடுபட்டவர்களுக்கும் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பேரூராட்சியில் எந்த டெண்டரானாலும் அதிகாரிகள் முன்னிலையில் குறைந்த விலைப்புள்ளி உள்ள டெண்டர் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது‘ என்றார்.