தினமலர் 21.07.2010
பார்க்கிங் கட்டணம் வசூல் ஆணையம் சிபாரிசுக்கு பெங்களூர் மேயர் அதிருப்தி
பெங்களூர், ஜூலை 21: பெங்களூரில் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று 3வது நிதி ஆணையம் சிபாரிசு செய்துள்ளதற்கு மேயர் எஸ்.கே.நடராஜ் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.
பெருநகர் மாநகராட்சி பட்ஜெட் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி நிதி நிலைக்குழு தலைவர் சதாசிவா தலைமையில் நேற்று பட்ஜெட் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பின் மேயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெருநகர் மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டுவது மற்றும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக ஏ.ஜி.கூட்கி தலைமையில் 3வது நிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாணையம் தற்போதுள்ள செய்துள்ள சிபாரிசில் மாநகரில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வராமல் பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளது. இது வரி வசூல் பட்டியலில் சேராமல் உள்ளது. இதை கண்டுப்பிடித்து வரி வசூல் பட்டியலில் சேர்க்க வேண்டும், வீட்டு முன் நிறுத்தி வைக்கும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்பட பல சிபாரிகள் செய்து அறிக்கை கொடுத்துள்ளது.
ஏ.ஜி.கூட்கி தலைமையிலான நிதி ஆணையம் செய்துள்ள சிபாரிசுள் மாநகராட்சியின் நிதி வருவாயை ஈட்ட வழி காணும் என்றாலும், உடனடியாக செயல்படுத்தினால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதுடன், விரோதம் சம்பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே 3வது நிதி ஆணையம் செய்துள்ள சிபாரிசுகளை வர்த்தக நிலையங்கள், கட்டிடங்களில் தொடங்கிய படிபடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாநகரில் உள்ளவர்களில் 60 சதவீதம் பேர் சரியாக வரி செலுத்தாமல் உள்ளனர். இவ்வாறு மேயர் கூறினார்.