தினமணி 19.04.2013
பிறப்பு, இறப்புச் சான்றளிக்க தனிப்பிரிவு
புதுக்கோட்டை நகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்க அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பிரிவு சேவை மையத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்த மையம் மூலம், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பதிவு மற்றும் தயார் நிலை குறித்தும் உடனடியாக அறிந்து கொள்ள முடியும். மேலும், குடிநீர் மற்றும் சொத்து வரிகளின் நிலுவை குறித்தும் உடனடி விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
நகர்மன்றத் தலைவர் (பொ) எஸ். அப்துல்ரகுமான் திறந்துவைத்தார். இதில் ஆணையர் ஆர். முருகேசன், நகராட்சிப் பொறியாளர் சுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜி. ஆறுமுகம், பி. கிருஷ்ணகுமார், அ. அய்யப்பன், சந்தோசநாதன், பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.