தினமலர் 29.05.2013
பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம்
வேலாயுதம்பாளையம்: புன்செய் புகளூர் டவுன் பஞ்., பகுதிகளில் ஒருங்கிணைந்த தீவிர பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் துப்புரவு பணி முகாம் நடந்தது.
புன்செய் புகளூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில், பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, துப்புரவு பணியாளர் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலம் கலெக்டர் அறிவுரையின் பேரில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டு மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
துப்புரவு பணியாளர் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு பணியாளர் மூலம் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடந்தது.
நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சுப்பிர மணியன், டவுன் பஞ்., தலைவர் லலிதா, துணைத்தலைவர் கௌசல்யா கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.