தினகரன் 29.04.2013
புதிய ஆழ்குழாய் கிணறு திறப்பு
உடுமலை, : உடுமலை 31வது வார்டு எம்ஜிஆர் நகரில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டுள்ளது. மோட்டார் மூலம் இங்கு தண்ணீர் சேமித்து விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் விநியோகத்தை நகராட்சி தலைவர் சோபனா துவக்கி வைத்தார்.குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு இந்த தண்ணீரை பயன்படுத்தும் படி நகராட்சி தலைவர் கேட்டுக்கொண்டார்.
இதேபோல் 28வது வார்டு பத்ரகாளியம்மன் லேஅவுட்டில் கூடுதல் கழிப்பிடமும், சிங்கப்பூர் நகரில் ரூ.7.80 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கண்ணையா, கவுன்சிலர்கள் ரேணுகா, கபிலன், மகாலட்சுமி, மளிகை செல்வம், முரளீதரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.