தினமணி 09.08.2010
புதிய கட்டடத்தில் பேரூராட்சி அலுவலகம்
பெரியகுளம், ஆக. : பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் செயல்படத் தொடங்கியது.
இப் பேரூராட்சி அலுவலகம் 1991-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந் நிலையில், தமிழக அரசின் ஆணையின் பேரில், இப் பேரூராட்சிக்கு 2009-10-ம் ஆண்டிற்கான அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.19.90 லட்சம் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
16.2.2010 அன்று தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்தார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள இக் கட்டடத்தில், பேரூராட்சி அலுவலகம் செயல்படத் தொடங்கியது. இத் தகவலை பேரூராட்சித் தலைவர் கே.குணசேகரன், நிர்வாக அலுவலர் ஒ.பாபுஜி ஆகியோர் தெரிவித்தனர்.