புதிய குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் தொடக்கம்
விழுப்புரம் நகரில் குடிநீர் குழாய்கள் பழுதானதையொட் டி, புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
பிடாகம் தென்பெண்ணையாற்று பகுதியில் இருந்து நகரக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் மூலம் 1966-ம் ஆண்டு விழுப்புரம் நகருக்கான குடிநீர் பணிகள் தொடங்கப்பட்டன.
இப்பணிகள் 1969-ம் ஆண்டு முடிவடைந்து, விழுப்புரம் நகருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விழுப்புரம் நகராட்சி பயணியர் விடுதி அருகே உள்ள குடிநீர் குழாய் செல்லும் வால்வு கடந்த 4 நாள்களுக்கு முன்பு பழுதடைந்தது.
இந்த வால்வு மிகவும் பழமையானது என்பதால் இதே போன்ற வால்வுகள் கொல்கத்தாவிலிருந்து வரவழைக்கப்பட்டன.
பின்னர் புதிய குழாய்கள் பதிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. மேலும் இக்குழாய்களுடன் இணைக்கப்பட்ட கை பம்புகளில் தற்போது தண்ணீர் வருவதால் அப்பகுதியில் குடிநீர் தேவை சீரானது.
குழாய் பழுது காரணமாக, கடந்த 4 நாள்களாக விழுப்புரம் மேற்கு பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.