தினகரன் 05.08.2010
புதிய பூமார்க்கெட் திறக்க வியாபாரிகள் எதிர்ப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
கோவை, ஆக 5: கோவையில் புதிய பூமார்க்கெட் திறக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைதொடர்ந்து பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் மாநகரா ட்சி சார்பில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டிய புதிய பூமார்க்கெட் திறப்பு விழா தொடர்பான கூட்டம் மாநக ராட்சி பிரதான அலுவலகத் தில் நேற்று நடந்தது. கோவை மாநகராட்சி கமிஷனர் அன் சுல் மிஸ்ரா, உதவி கமிஷனர் கள் சவுந்திரராஜன், சுந்தர ராஜ், பூமார்க்கெட் கடை வியா பாரிகள், பூ விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மார்க்கெட் வியாபாரி கள் பேசுகையில், ” மார்க்கெட் டில் தற்போது 144 கடைகள் செயல்படுகிறது. இது தவிர 29 ஸ்டால் மற்றும் 21 பக்கவாட்டு கடைகள் செயல்படு கிறது. இந்த மார்க்கெட்டிலிருந்து குறிப்பிட்ட சில கடை கள் புதிய மார்க்கெட் வளாகத்திற்கு செல்ல இயலாது. அப்படி சென்றால், வியா பாரம் பாதிக்கப்படும். விவசாயிகள் யாருக்கு பூ கொ ண்டு வந்து தருவார்கள், ஏஜண்டுகள் யாருக்கு பூ சப்ளை செய்வார்கள் என கண்டறிய முடியாது.
ஏற்கனவே வியாபாரம் பாதிப்பில் இருக்கிறது. புதிய பூ மார்க்கெட் கடை எங்க ளுக்கு தேவையில்லை. பழைய கடைகளில் வியாபாரம் செய்து கொள்கிறோம். எங்களை யாரும் கட்டாயப்படுத்தவேண்டாம், ” என்ற னர்.
விவசாயிகள் தரப்பில் பேசுகையில், “எந்த வியா பாரி எங்களுக்கு பூ விற்று பணம் தருகிறாரோ அவரி டம் தான் நாங்கள் பூ தரவேண்டியுள்ளது. புதிய பூ மார்க்கெட் திறந்தால் எந்த பூவிற்கு எவ்வளவு தொகை என கணிக்க முடியாது. பிரச் னை தான் அதிகரிக்கும். வாகனங்களுக்கும், பூ கூடைக் கும் சுங்கம் செலுத்தவேண்டியுள்ளது, ” என்றனர்.
கமிஷனர் அன்சுல் மிஸ் ரா பேசுகையில், ” பொதுவாக சில பிரச்னைகள் இருக்கி றது. இதை சரி செய்து விட லாம். புதிய மார்க்கெட்டில் அனைத்து வசதியும் செய்து தருகிறோம். குளிர்பதன கிடங்கு வசதியும் செய்து தருகிறோம். ஏன் செல்ல மறுக்கிறீர்கள். புதிய மார்க் கெட் உங்கள் வசதிக்காக தான் கட்டியிருக்கிறோம். என்ன பிரச்னை என தெரியப்படுத்துங்கள். அதை சரி செய்து விடலாம். கட்டடம் கட்டும் வரை எதுவும் சொல் லாத நீங்கள் இப்போது ஏன் எதிர்க்கிறீர்கள், ” என்றார்.
அதற்கு பதில் அளித்து பேசிய வியாபாரிகள், ” ஒரு பூமார்க்கெட் போதும். இரட் டை பூ மார்க்கெட் வேண் டாம். பழைய மார்க்கெட், புதிய மார்க்கெட் என பிரி த்து விட்டால் வியாபாரம் பாதிக்கும். எங்களை கேட்டு விட்டு மாநகராட்சி நிர்வா கம் கட்டடம் கட்டவில்லை. புதிய கட்டடத்திற்கு சென் றால் ஏல தொகை அதிகரிக்கும். சிலர் சுங்க தொகை அதிகமாக வசூலிக்கிறார்கள். பழைய இடமே போதும், அங்கேயே கடை நடத்தி கொள்கிறோம், ” என்றனர்.
தொடர்ந்து பேசிய மாநககராட்சி கமிஷனர் கூறியதாவது: ” 200க்கும் மேற்பட்ட கடை வியாபாரிகள் ஒரே இடத்தில் கடை நடத்தும் வகையில் ஆய்வு நடத்தப்படும். வியாபாரிகள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
சுங்க தொகை அதிகமாக கேட்டால் புகார் கொடுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன். ஏற்கனவே சில ஒப்பந்ததாரர்கள் மீது அதிக வசூல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தைரியமாக புகார் தாருங்கள். புதிய மார்க்கெட் டில் கடை வைப்பது குறித்து உங்கள் முடிவிற்காக காத்திருக்கிறோம்.
அதுவரை ஏலத்தை ஒத்தி வைக்க முடிவு செய்திருக்கிறேன், மீண்டும் அடுத்த முறை பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யலாம். ஏலம் இன்றி கடை ஒதுக்க முடியாது, ” இவ்வாறு அவர் கூறினார்.